Posted on Mar 31, 2018

Singapore Tamil Youths' Club

1. தமிழ் இளையர் மன்றம்

பெ. கோவிந்தராசு

சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றத்தின் முதல் பொதுச்செயலாளராக திரு பெ கோவிந்தராசு அவர்கள் பணியாற்றினார். சிறந்த தமிழ் எழுத்தாளராகிய அவர் 1995-ஆம் ஆண்டில், என் வாழ்க்கைப் பேரேட்டில் சில ஏடுகள் எனும் நூலை எழுதினார். நூலின் முழுச் செலவையும் பேராசிரியர் அ. வீரமணி ஏற்றார். நூல் வெளியீட்டை சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் நடத்தியது. இக்கட்டுரை, அந்த நூலின் மூன்றாவது அத்தியாயமாக அமைந்தது. பக்கங்கள் 35 - 63.

நான் தமிழ் முரசு மாணவர் மணிமன்ற மலரில் எழுதி ஆசிரியரின் பாராட்டைப் பெற்ற கவிதை உருவிலான என் வாழ்க்கை வரலாற்றின் கடைசி வரிகள் இதுதான். "மங்கி வாழும் தமிழ்ச் சமுதாயத்தில் ஒளி காணத் துடிக்கும் மாணவன்” என்ற வரியே அது.
அப்போதைய மிதவாத சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினர் திரு ரெ. வெற்றிவேல் அவர்களின் முன்னேற்றம் வார இதழில் சிங்கைக் கவிஞர் திரு முகிலன் எழுதிய ஒர் கவிதையின் இரண்டு வரிகள்.

1950க்கு பிறகு, 1960ம் ஆண்டுகள் வரையில் சிங்கப்பூரில் தமிழர்களின் வாழ்க்கையில் மலர்ச்சி இருந்தது. ஆனால் செல்வ வளர்ச்சி இல்லை.
இங்கு வேலை செய்து சம்பாதிக்கின்ற பணம் - முக்கால் பங்கு தமிழகம் சென்று விடும். இங்கு குடும்பமாக வாழ்ந்தவர்கள் கூட - தமிழ்நாட்டுப் பற்றாளராக இருந்தனர். பல குடும்பங்கள் 1955க்கு பிறகு 1960களில் குடும்பத்தோடு தமிழகம் சென்று விட்டனர் என்பதும் உண்மை. உதாரணம், நாங்கள் இருந்த ஹிந்து ரோடு (Hindoo Road) குடியிருப்புப் பகுதியில் வாழ்ந்த குடும்பங்களில் பலர், குடும்பத்தோடு தமிழகம் சென்று விட்டதை நான் அறிவேன்.

Full Acticle in Book
Singapore Tamil Youths' Club
ISBN: 978-981-11-5756-1
email us: styc1957@gmail.com